தேசியக்கொடியை அவமதித்த நபரை, நையப்புடைத்து ஊர்வலமாக இழுத்து சென்ற மக்கள்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்திய தேசியக் கொடியானது தீ வைத்து எரிக்கப்பட்ட அவமதிப்பது செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. 

இந்த விசயத்திற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், தேசியக்கொடியை அவதூறு செய்த நபர், கோலார் மாவட்டத்தில் உள்ள பகுதியில் லாரியில் கல் ஏற்றுவதற்காக வந்துள்ளார். 

அப்போது அவரைக் கண்ட பொதுமக்கள் தேசிய கொடியை தீவைத்து எரித்த நபர் என்பதை உறுதி செய்து சரமாரியாக அடித்துள்ளனர். இதன் பின்னர் கையில் தேசியக் கொடியும், மற்றொரு கையில் கன்னட கொடியையும் கொடுத்த பொதுமக்கள் தெருத்தெருவாக ஊர்வலம் அழைத்துச் சென்றுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் பிடிபட்டு இருந்த நபரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்திரகுமார் என்ற 53 வயது நபர் என்பதும், இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Hosur North Indian Youngster Contempt Nation Flag Peoples Attacked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->