நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. அப்செட்டான மருமகன் மகனுக்கும், மாமனாருக்கும் செய்த கொடுஞ்செயல்.! - Seithipunal
Seithipunal


சொத்துக்காக மாமனாரை காரை ஏற்றிக்கொலை செய்த மருமகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் கிளிமானூர் பகுதியை சார்ந்தவர் யாகியா (வயது 75). இவரது மகளிற்கும், அங்குள்ள மடக்கரா பகுதியை சார்ந்த அப்துல் சலாம் (வயது 52) என்பவருக்கும் இடையே பல வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் அப்சல் என்ற 14 வயது மகன் இருக்கிறார். 

இந்நிலையில், கணவன் - மனைவி இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தாயுடன் மகனும் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் விவாகரத்து கூறி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிறைவுபெற்றுள்ள நிலையில், விரைவில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு அப்துல் சலாமின் மனைவிக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்துல் சலாம் தனது சொத்துக்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயருக்கு எழுதிக்கொடுக்க முடிவெடுத்துள்ளார்.

இந்த திட்டத்தினை அறிந்துகொண்ட அப்துலின் மனைவி சொத்துக்களை யார் பெயருக்கும் மாற்ற கூடாது என தடையாணை வாங்கியுள்ளார். இந்த தடையாணையை வழங்க நீதிமன்ற ஊழியர் அப்துல் சலாமின் சகோதரி வீட்டிற்கு செல்லவே, அங்கு இருந்த அவரது மாமனாரை கார் வைத்து ஏற்றியுள்ளார். 

இதில், அப்துலின் மகனும் காயமடைந்த நிலையில், அப்துலின் மாமனார் யாக்கியா, அவரது பெற அப்சல் சபியா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த சம்பவத்தில் அப்துலின் மாமனார் சிகிச்சை பலனின்றி பலியாகவே, அவரது மகன் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், யாக்கியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அப்துலின் மகனிடம் மேற்கொண்ட விசாரணையில் தந்தை தாத்தாவை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்துள்ளான். இதனையடுத்து அப்துல் சலாமை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Thiruvananthapuram man Murder due to Land Issue Waiting for Divorce


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->