காதல் விவகாரம்: உடன்பிறந்த சகோதிரியை குத்தி கொலை செய்து, வீட்டோடு எரித்த இளம்பெண்.!  - Seithipunal
Seithipunal


காதல் விவகாரத்தில் தன் உடன் பிறந்த சகோதரியை எரித்துக்கொலை செய்த 22 வயது ஜீது என்ற இளம் பெண்ணை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் கக்கநாடு பகுதியை சேர்ந்த ஜீதுவை, நேற்று ஆதரவற்ற இல்லத்தில் தங்கி இருந்த போது கேரள காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அவர் தனது சகோதரியை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பின்வரும் செய்தி தொகுத்து வழங்கப்பட்டுள்ளது,

பெற்றோர் இல்லாத நேரத்தில் சகோதரி விஸ்மயா, ஜீது காதலன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஜீது, கத்தி எடுத்து தனது சகோதரி விஸ்மயாவை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் மயங்கி விழுந்த சகோதிரி மீது, மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து எரித்துள்ளார் ஜீது.  அப்போது வீடு முழுவதும் தீ பற்றியதால், அவர் தனது ரத்தக்கரை படிந்த ஆடையை மாற்றி விட்டு தப்பித்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஜீது தலைமறைவாகியதால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனையடுத்து அவர் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்ததை அறிந்த போலீசார் கேரள போலீசார், உடனடியாக அவரை கைது செய்து விசாரணை செய்ததில், நடந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

காதல் விவகாரத்தில் தனது சொந்த சகோதரியை குத்திக் கொலை செய்து, அவரை மண்ணெண்னை ஊற்றி எரித்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala love issue sister murder case


கருத்துக் கணிப்பு

அதிமுகவின் ஒற்றை தலைமை உங்கள் சாய்ஸ் யார்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுகவின் ஒற்றை தலைமை உங்கள் சாய்ஸ் யார்?
Seithipunal