தங்க கடத்தல் வழக்கு: சுவப்னா உள்பட 44 பேருக்கு ரூ.66 கோடி அபராதம் விதித்த சுங்கத்துறை!  - Seithipunal
Seithipunal


கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் துபாயில் இருந்து வந்த விமானம் மூலம் திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலில் சுமார் 30.245 கிலோ எடை கொண்ட ரூ.14.82 கோடி மதிப்புடைய தங்கம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. 

ஒரு நாட்டின் தூதராக பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமீரக தூதரக துணை தூதரின் நிர்வாகச் செயலாளராக பணியாற்றி வந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த சுவப்னா சுரேஷ், இவருக்கு ஆதரவாக செயல்பட்ட முதல் மந்திரி மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர், தூதராக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சுங்கத்துறை, அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ. போன்றவற்றில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. 

இந்த வழக்கு எர்ணாகுளம் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடத்தலில் நேரடியாக ஈடுபட்ட சுவப்னா சுரேஷ் உள்பட 3 பேருக்கு ரூ. 6 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் கடத்தலில் தொடர்புடைய 44 பேர் மொத்தம் ரூ. 66.65 கோடி அபராதம் செலுத்த மத்திய சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala gold smuggling swapna including 44 persons penalty


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->