கேரள சிறுமியின் கடிதத்தால் உருக்கமான நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


ஒரு கேரள குழந்தையின் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது மனதையும் வென்றுள்ளது. 

பிரபல கேரள எழுத்தாளரான ராஜேஷ் மோன்ஸி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு சிறுமியின் கடிதத்தை வெளியிட்டு இருக்கின்றார். ராஜேஷ் தன்னுடைய தாயின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற பொழுது அங்கே DYFI மூலம் அவருக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த உணவு பொட்டலத்தில் ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் ஒரு சிறுமி, "உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உணவு ருசியாக இல்லை என்றால் தயவு செய்து மன்னித்து விடுங்கள். என் வீட்டில் அம்மா இல்லாத காரணத்தால் பள்ளிக்கு செல்கின்ற அவசரத்தில் நானே சமைத்தேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த குழந்தையின் பொறுப்பை பார்த்து மெய்சிலிர்த்து போய் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Girl letter Viral


கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?
Seithipunal