கால்பந்து உலகக் கோப்பை போட்டியை பார்க்க 23 லட்சம் செலவு செய்த கேரளா இளைஞர்கள்.! - Seithipunal
Seithipunal


2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். 

இந்தியாவிலேயே கால்பந்துக்கு அதிக ரசிகர்கள் உள்ள மாநிலம் என்றால் அது கேரளாதான். கிரிக்கெட்டில் இந்தியா விளையாடுவதால் பலருக்கு தேச உணர்வு இருக்கிறது. ஆனால் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா இல்லை என்றாலும் கூட கேரள ரசிகர்கள் வெறித்தனமாக இருப்பார்கள்.

அந்த வகையில், அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் மற்றும் பிரேசில் போன்ற கால்பந்து அணியின் முக்கிய வீரர்களுக்கு கேரளா ரசிகர்கள் பலரும் ஆதரவாக இருப்பார்கள். மேலும், அவர்களை போலவே ஜெர்சி அணிந்து விளையாடி மகிழுந்து தங்களது அன்பை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். 

இந்த நிலையில் கேரளாவில் கால்பந்து போட்டியை பார்க்க 17 இளைஞர்கள் சேர்ந்து 23 லட்சத்திற்கு வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளனர். மேலும் அந்த வீட்டில் வசதிகளுடன் பெரிய திரையை தயார் செய்துள்ளனர்.

இந்த இளைஞர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து கால்பந்து போட்டிகளை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளதாகவும் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று வீட்டை வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala football fans buy 23 lakhs House


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->