1., 30., 200 ரூபாய்., பேருந்து, ஆட்டோ கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு.!  - Seithipunal
Seithipunal


பெட்ரோல் - டீசல் விலை உயர்வு காரணமாக கேரளா மாநிலத்தில் இன்று முதல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவித்திருப்பதாவது:-
 
"கேரளாவில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையால் பேருந்து கட்டணமும் உயர்கிறது. அரசு பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் குறைந்தபட்ச கட்டணம் எட்டு ரூபாயில் இருந்து பத்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதே போல் பேருந்துகளில் கிலோ மீட்டர் கட்டணம் 90 பைசாவில் இருந்து, 1 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது  .

ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் 25  இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், டாக்சிக்கு குறைந்தபட்ச கட்டணம் 175 ரூபாயில்  இருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது". என்று கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala bus ticket price hike


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->