#BREAKING : கேரளா படகு விபத்து.. 22 பேர் பலி.. கேரள முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் உல்லாச படகில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உல்லாச படகில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படகு விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையின் மற்றும் மீட்பு படையினர் நீரில் மூழ்கிய அனைவரையும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த விபத்தில் கடலில் மூழ்கி 5 குழந்தைகள், பெண்கள் உட்பட 22 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படகு விபத்தில் மாயமான சில பயணிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே வேளையில் கேரளாவில் சுற்றுலா படுகு பயணம் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்குள்ளான படகு இரவு 7 மணி வரை கடலில் கடலில் பயணம் மேற்கொண்டது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கேரளா படகு விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரதமர் மோடி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala boat capsized CM pinarayi vijayan announce relife fund


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->