உலக திருநங்கை அழகி போட்டி.. பட்டம் வென்றார் கேரள அழகி ஸ்ருதி சித்தாரா..! - Seithipunal
Seithipunal


உலக திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் இந்திய மாடல் அழகி பட்டம் பெற்றார்.

உலக அளவில் திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், கொரோனா பெருந்தோற்று காரணமாக ஆன்லைன் வாயிலாக இந்தாண்டுக்கான  அழகி போட்டி நடைபெற்றது. கடந்த 6 மாதங்களாக நடந்த இந்த போட்டியில் கேரளாவை சேர்ந்த ஸ்ருதி சித்தாரா (25)  மிஸ் டிரான்ஸ் குளோபல் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றார்.

விரைவில் லண்டனின் நடைபெறும் நிகழ்ச்சியில் ஸ்ருதி சித்தாரா பட்டம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது. இந்த பட்டம் குறித்து ஸ்ருதி சித்தாரா தெரிவிக்கையில், இந்த போட்டிக்காக மாதகணக்கில் தயாராகி வந்தேன். முதல் ஐந்து இடங்களில் வருவேன் என எதிர்பார்த்தேன் ஆனால், பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், இந்த பட்டத்தை காலம் சென்ற தனது தாயாருக்கும், அவரின் நண்பரும் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட முதல் ரேடியோ ஜாக்கியுமான அனன்யா குமாரி அலெக்ஸிற்கும் சமர்பிப்பதாக தெரிவித்தார். இந்த போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிலிப்பைன்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த அழகிகள் பெற்றது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala beauty Sruthi Siddhartha wins world transgender beauty pageant


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->