தள்ளுமுள்ளு அடிதடியாக மாறவிருந்த அதிர்ச்சி தருணம்.. காவல் ஆய்வாளர் செய்த நெகிழ்ச்சி காரியம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் புலம்பெயர்ந்த பிற மாவட்ட தொழிலாளர்கள் மற்றும் பிற மாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வரும் நிலையில், பிற மாவட்ட தொழிலாளர்களை கர்நாடக அரசு சொந்த செலவில் அரசு பேருந்தில் ஊருக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், பிற மாநில தொழிலாளர்கள் 3 இரயில்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு கட்டிட பணிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் ஊர் திரும்பினால் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தொய்வு ஏற்படும் என்று கருதி, வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப இரயில்கள் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று தெரிவித்தது.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழிலாளர்கள் தீடீரென கூடி போராட்டத்தில் ஈடுபடவே, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கூறி பிடிவதம் பிடித்துள்ளனர். இவர்களை காவல் துறையினர் சமாதானம் செய்த நிலையில், யாரும் சமாதானத்தை ஏற்காமல், தங்களை ஊருக்கு அனுப்பி வைக்க கூறி கோஷங்களை எழுப்பினர். மேலும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து, நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும் என்பதால் மாதநாயக்கனஹள்ளி காவல் ஆய்வாளர் திட்டம் தீட்டியுள்ளார். 

இதனையடுத்து காவல் வாகன ஒலிபெருக்கி மூலமாக தேசிய கீதத்தை இசைக்கவே, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தேசிய கீதத்திற்கு மரியாதையை கொடுத்து அசையாமல் அப்படியே நின்றனர். இதனையடுத்து காவல் ஆய்வாளர் மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து, அங்கிருந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka police play national anthem when strike by migrate labors


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->