மீண்டும் பெங்களூர் சிறைவாசத்தில் அரசியல்கட்சி முக்கிய புள்ளிகள்?... வெளியான அதிர்ச்சி தகவல்.. நீதிமன்றம் கெடுபிடி.!! - Seithipunal
Seithipunal


சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, பெங்களூரில் உள்ள பரப்பன அஹ்ரகாரம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சொத்துகுவிப்பு குற்றவாளி சசிகலாவுக்கு சிறையில் பல்வேறு சொகுசு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி சத்ய நாராயணாவுக்கு ரூ.2 கோடி இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. 

இந்த விஷயம் தொடர்பாக ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா வழங்கிய புகாரின் பேரில், பெங்களூர் ஊழல் தடுப்பு படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 வருடங்கள் ஆகியும் எந்த விதமான விசாரணை அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

தற்போது, சசிகலா விடுதலையாகி வெளியே வந்துவிட்ட நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையை சார்ந்த சமூக ஆர்வலர் கீதா கர்நாடக நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஏ.எஸ் ஓகா, சூரஜ் கோவிந்தராஜ் ஆகியோரின் அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. 

அரசுத்தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிக்கையை தாக்கல் செய்ய காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், கால அவகாசம் தங்களுக்கு வேண்டும் என்றும் நீதிபதிகளிடம் வாதிட்டனர். இதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணை அறிக்கையை இரண்டு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

இதனால் விசாரணை முடிவில் குற்றம் உறுதி செய்யப்பட்டு டி.ஜி.பி சத்திய நாராயணா கைது செய்யப்படுவாரா? அவருக்கு இலஞ்சம் கொடுத்த அரசியல் கட்சிப்பிரமுகர்கள் யார்? யார்? கைது செய்யப்படுவார்கள்? அல்லது இறுதியில் குற்றம் நிரூபணம் இல்லாமல் தீர்ப்பு வருமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka High Court Order to Bribery Control Police Submit Case Investigation Sasikala DGP Sathya Narayana Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->