கர்நாடக முதல்வருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியின் போது ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா பதவி விலகக் கோரி கடந்த 2022 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது. 

இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து சித்தராமையா உள்ளிட்ட அமைச்சர்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் அவர்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும் சிறப்பு நீதிமன்றம் முன்பு வருகின்ற மார்ச் 6ஆம் தேதி முதலமைச்சர் சித்தராமையா ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka CM fined Rs 10000


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->