காதல் திருமணம் செய்த வாலிபர், மனைவியின் கண்முன்னே கொலை.. பெண்ணின் உறவினர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


காதல் திருமணம் செய்த வாலிபரை, பெண்ணின் உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ராஜகோபால்நகர் பகுதியை சார்ந்தவர் சேத்தன் (வயது 25). இவரது மனைவி பூமிகா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள லக்கரேயில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். 

இந்த காதல் திருமணத்திற்கு பூமிகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று பூமிகாவின் பிறந்தநாள் வந்துள்ளது. பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க பூமிகாவின் சகோதரர் ஆகாஷ் மற்றும் அவரின் சித்தப்பா நஞ்சே கவுடா ஆகியோர் சேத்தனின் இல்லத்திற்கு வந்துள்ளனர். 

இதன்போது, இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, பூமிகாவின் சகோதரர் மற்றும் சித்தப்பா சேத்தனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே சேத்தன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

கணவர் கண்முன்னே பலியாவதை கண்டு அதிர்ச்சியடைந்த பூமிகா கதறியழவே, அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கும் போது உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராஜகோபால்நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சேத்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆகாஷ் மற்றும் நஞ்சே கவுடா ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka Bangalore man Murder due to Love Marriage police arrest Relation of woman 2 Persons


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->