இன்னும் 08 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி பொருளாதாரம் 45 பில்லியன் டாலர்களை எட்டும்; ஜிதேந்திர சிங் உறுதி..! - Seithipunal
Seithipunal


அடுத்த 08 ஆண்டுகளில் (2034-ஆம் ஆண்டுக்குள்) இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம், 45 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் நடைபெற்ற புளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய போது கூறியதாவது; 

இந்தியா தனது தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்துவதைத் தாண்டி, உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த வர்த்தக விண்வெளி நிறுவனங்களைக் கட்டமைத்து வருகிறது என்றும், இந்திய நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும், உலகச் சந்தைகளில் அவற்றின் இருப்பை விரிவாக்குவதற்கும், அதிக முதலீடு, விரைவான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் ஆகியவை இன்றியமையாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.

2019-2020-இல் இந்தியாவின் விண்வெளித் துறை தனியார் பங்கேற்புக்கு அனுமதிக்கப்பட்டது. அதன் விளைவாக, வெறும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைத்துள்ளன என்று குறிப்பிட்டதோடு, கணிசமான தொழில்நுட்ப நிபுணத்துவம், முதலீடு, நீண்ட கால அர்ப்பணிப்பு தேவைப்படும் ஒரு துறையில், அரசு நிறுவனங்களையும் தனியார் தொழில்துறையையும் ஒன்றிணைப்பதன் ஆற்றலை இந்தியா அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது சுமார் 09 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம், அடுத்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் 40 முதல் 45 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jitendra Singh assures that India’s space economy will reach $45 billion within 8 years


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->