தனியாரில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு.. 5 சிலிண்டர் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜே.டி.எஸ்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே ஆட்சி பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காது என தெரிய வந்துள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு பலிக்கும் பட்சத்தில் மீண்டும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி கிங்மேக்கராக மாறும் நிலை ஏற்படும். கடந்த காலங்களில் நடைபெற்ற ஒவ்வொரு பொது தேர்தலிலும் ஜேடிஎஸ் கட்சி 25 முதல் 40 தொகுதிகள் வரை வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலில் குறைந்தது 30 தொகுதிகளை ஜேடிஎஸ் கைப்பற்றலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஜேடிஎஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜேடிஎஸ் கட்சியின் தேர்தல் உத்தரவாத பத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பை முன்னாள் பிரதமர் தேவகவுடா வெளியிட்டுள்ளார். அந்த தேர்தல் அறிக்கையில் "ஜேடிஎஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிவசக்தி சங்கங்களில் மக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதங்களுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

விதவைப் பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை 2500ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 5 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். விவசாய குடும்பங்களுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகை ரூ.5000 ஆக உயர்த்தப்படும். அங்கன்வாடி மையங்களில் 15 ஆண்டுகள் பணி செய்தால் ஓய்வூதியம் வழங்கப்படும். தனியார் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்படும். விவசாய இளைஞர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். கல்லூரி படிக்கும் 60 ஆயிரம் மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படும். அறுவை சிகிச்சைக்கு 25 லட்சம் ரூபாய் வரை நிதி வழங்கப்படும். மாநில முழுவதும் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தொடங்கப்படும் போன்ற 12 அறிவிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஜேடிஎஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JDS party released Karnataka election manifesto


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->