பிகார்: துணை முதல்வர் வேட்பு மனுவில் சிக்கல்!
Jan Suraj Party Deputy CM candidate affidavit issue
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் சாம்ராட் சௌதரியின் வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் அம்மாநில அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தாராபூர் தொகுதியில் போட்டியிடும் சாம்ராட் சௌதரி, தனது பிரமாணப் பத்திரத்தில் “பிஎஃப்சி” எனப்படும் Pre-Foundation Course படித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், அவரின் கல்வித் தகுதி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
முன்னதாக, ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், சாம்ராட் சௌதரியின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி குறித்து சந்தேகம் எழுப்பியிருந்தார். தற்போது, பிரமாணப் பத்திரத்தில் “பிஎஃப்சி” எனக் குறிப்பிடப்பட்டிருப்பது அதில் மேலும் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர், “பிஎஃப்சி என்பது தமிழ் பேசுவோருக்கான படிப்பா?” எனக் கேள்வி எழுப்பியதுடன், சாம்ராட்டின் உண்மையான கல்வித் தகுதி இன்னும் வெளிப்படையாக சொல்லப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அதோடு, சாம்ராட் சௌதரி தனது வயதை 56 என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், 1995ஆம் ஆண்டில் நடந்த தாராபூர் படுகொலை வழக்கில் தன்னை சிறுவனாக (மைனர்) குறிப்பிடப்பட்டதாக பழைய பதிவுகள் கூறுகின்றன. இதை சுட்டிக்காட்டிய பிரசாந்த் கிஷோர், “அப்போது சிறுவனாக கூறியவர் இன்று 56 வயதாகச் சொல்வது எப்படி?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், தாராபூர் படுகொலை வழக்கில் சாம்ராட்டுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதா அல்லது வழக்கு முடிவடைந்ததா என்பது குறித்தும் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
English Summary
Jan Suraj Party Deputy CM candidate affidavit issue