ஜம்மு துப்பாக்கி சூட்டில் தப்பித்த குழந்தை.. அழுது புலம்பிய சோகம்.. ஆறுதல் கூறிய அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகளவு இருக்கிறது. தினமும் பாக்கிஸ்தான் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதும், இந்திய தரப்பில் பதில் தாக்குதல் தொடுப்பதும் இடம்பெற்று வருகிறது. 

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோப்பூரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரி மற்றும் கிராம பொதுமக்களில் ஒருவர் பரிதாபமாக இருக்கின்றனர். 

பலியான நபருடன் வந்திருந்த குழந்தை, உறவினர் இறந்தது கூட தெரியாமல், உறவினரின் சடலத்திற்கு அருகே அமர்ந்து அழுதுகொண்டு இருந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து குழந்தையை மீட்ட காவல் துறையினர், குழந்தைக்கு ஆறுதல் கூறி, குழந்தையின் தாயிடம் ஒப்படைக்க காரில் அழைத்த சென்றனர். இதில் குழந்தை அழுதுகொண்டு இருந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி கண்கலங்க வைத்துள்ளது.

சோபூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது 3 வயது குழந்தையை ஜம்மு-காஷ்மீர் போலீசார் ஆறுதல் கூறி, அவரை தனது தாயிடம் அழைத்துச் செல்லுங்கள். தாக்குதலின் போது குழந்தை இறந்த உறவினரின் அருகில் அமர்ந்திருந்தது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jammu Terrorist attack baby rescue by Police cry video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->