போதைப் பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளின் காவல் நீட்டிப்பு.!  - Seithipunal
Seithipunal


போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உள்பட 5 பேரில் நீதிமன்ற காவல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை நீடித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தி.மு.க முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு துறையினர் கைது செய்தனர். 

இதனை அடுத்து ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது. இந்நிலையில் ஜாபர் சாதிக், சதா, முகேஷ், அசோக் குமார், ரகுமான் ஆகியோரின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது. 

இதனை ஜாபர் சாதிக்கு உட்பட 5 பேரையும் இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 16ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jaber Sadiq including 5 people custody extension


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->