விக்ரம் லேண்டர் குறித்து முக்கிய தகவலை இன்று வெளியிடும் இஸ்ரோ! - Seithipunal
Seithipunal


நிலவைச் சுற்றி வரும் அமெரிக்க விண் ஆய்வு நிறுவனமான நாசாவின்  LRO ஆர்பிட்டர் நிலவில் செயலிழந்து சாய்ந்த லேண்டர் விக்ரமின் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பிவைக்க உள்ளது. இதன் மூலம் சந்திரயான் 2 திட்டத்தின் கதி என்ன என்பது துல்லியமாக தெளிவாகும்.  லேண்டர் விக்ரமுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் திட்டத்திற்கும் இந்த புகைப்படம் உதவக்கூடும். 

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திரயான் 2 இருந்து நிலவில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கடைசி நிமிடத்தில் தகவல் தொடர்பை இழந்துவிட்டது. அதனிடமிருந்து எந்த ஒரு தகவலையும் அதன் பின் பெற முடியவில்லை. இதையடுத்து அமெரிக்க விண் ஆய்வு நிறுவனமான நாசாவின் உதவியுடன் விக்ரம் லேண்டரின் தற்போதைய நிலைமையை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். 

மேலும், நாசாவின் விண் ஆய்வு நிலையத்திலிருந்து விக்ரம் லேண்டருக்கு ஹலோ சமிக்ஞைகள் அனுப்பப்படுகிறது. நேற்றிரவு இந்த ஆய்வுகளின் மற்றொரு முயற்சியாக தற்போது நிலவை சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர் மூலம் நிலவில் விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை சரியாக கணிக்கும் வகையில் படம் எடுக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். 

நேற்றிரவு நாசா எடுத்த புதிய படங்களை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

isro release photos of vikram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->