மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.. இஸ்லாமிய வாரியம் பதில் மனு தாக்கல்..!! - Seithipunal
Seithipunal


மகராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த இஸ்லாமிய சமூக ஆர்வலரும் மற்றும் வழக்கறிஞருமான ஃபர்ஹா அன்வர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் "மசூதிக்குள் பெண்கள் செல்வதை தடை செய்வது சட்ட விரோதமானது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயலாகும். 

பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான இத்தகைய தடையை இஸ்லாம் விதிக்கவில்லை. ஆண்கள் தங்கள் மனைவிகளை தொழுகை செய்ய விடாமல் தடுத்ததை முகமது நபி கண்டித்துள்ளார். அத்துடன் மெக்கா மற்றும் மதினாவில் பெண் யாதிரிகள் ஆண்களுடன் சேர்ந்து ஹஜ் மற்றும் உம்ரா சடங்குகளை செய்கின்றனர்" என தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஃபர்ஹா அன்வரின் வாதத்தினை ஏற்க மறுத்த அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் வாரியம் ''இஸ்லாமிய பரிசுத்த வேதத்தில் குறிப்பிட்டுள்ள பாலின பிரிவினையை நிராகரிக்க முடியாது. ஏற்கனவே உள்ள கட்டடங்களில் நிர்வாக குழுவின் மூலம் வாய்ப்பிருந்தால் பெண்கள் வழிபட புதிய இடங்களை அமைத்துக் கொள்ளலாம். இனி புதிதாக கட்டும் வசதிகளில் பெண்களுக்கு தனி இடம் வழங்க வேண்டும்" என வாதிட்டனர்.

மேலும் மனுதாரரின் வாதங்கள் பாரம்பரியமிக்கதல்ல. வல்லுனர்களின் அமைப்பினால் இஸ்லாமிய கருத்துரிமைகளின் அடிப்படையில் ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும். வாரியமும் உச்ச நீதிமன்றமும் தனி நபரால் நிர்வகிக்கப்படும் மத வழிபாட்டுத் தலங்களில் தலையீடு செய்ய முடியாது.

மேலும் மெக்கா மற்றும் மதினாவை பொருத்தவரை அங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என சில விதிவிலக்குகள் இருக்கிறது. இஸ்லாமிய பெண்களும் ஆண்களைப் போல ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுக வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. வாரம் ஒரு நாள் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை செய்வதும் மதக் கட்டமைப்பில் இல்லை. எனவே பெண்கள் தங்கள் விருப்பத்தின் படி வீட்டிலோ அல்லது மசூதியிலோ அவர்கள் தொழுகை செய்வதற்கு தடை ஏதுமில்லை என வாரியம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Islamic Board reply court cannot interfere in religious beliefs


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->