இமாச்சலில் தொடரும் கனமழை.. பாலத்தை அடித்துச் சென்ற பெருவெள்ளம்.. அதிர்ச்சியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆத்-பஞ்சரை இணைக்கும் 50 வருட பழமையான பாலம் அடித்து செல்லப்பட்டது. இதேபோன்று இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது

அதே போன்று கரையோரம் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், கார்கள், கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இமாச்சலப் பிரதேசத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு அதிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iron bridge was swept away in Himachal floods


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->