#BigBreaking || ஐபிஎல் இறுதி போட்டி சற்றுமுன் உறுதியானது.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் சீசன் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. ஐபிஎல் குவாலிபையர்-2 அபு தாபியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இதில் டெல்லி அணி வெற்றி பெற்று இறுதி போட்டியில் மும்பை அணியுடன் மோத உள்ளது. 

இன்றைய குவாலிபையர்-2 வது ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் - ஷிகர் தவான் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட தொடங்கினர். இந்த ஜோடி வெற்றிகரமாக 50 ரன்களை கடந்தது.

மார்க்கஸ் ஸ்டோனிஸ் 27 பந்துகளில் 38 ரன்கள் அடித்த போது போல்டு ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனது அதிரடி ஆட்டத்தால் (6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள்) 50 பந்துகளில் 78 ரன்கள் குவித்த போது, சந்தீப் சர்மா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ விக்கெட் ஆனார்

அதிரடியாக ஹெட்மேயர் ஆடிய 22 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை சேர்த்துள்ளது. 

இதனை அடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு,  172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்று உள்ளது.

இதன் மூலம் டெல்லி கேப்பிடல் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோத உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 final mi vs dc


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->