இன்டர்நெட் பேங்கிங் இரத்து செய்யப்படும்.! பீதியை கிளப்பும் எஸ்.பி.ஐ..!! - Seithipunal
Seithipunal


 

"டிஜிட்டல் இந்தியா" என்று அறிவித்து அந்த திட்டத்தை மத்திய அரசானது ஊக்குவித்த காலத்தில் இருந்தே., இணையம் வழியான பணபரிவர்தனைகளை விரும்புகிறது. அந்த வகையில் நாமும் எந்த ஒரு பொருட்களை வாங்குவதற்கும்., பயணசீட்டுகளை முன்பதிவு செய்வதற்கும் இணையம்வழியாகவே பதிவு செய்துவிட்டு அதன் மூலமாகவே பணத்தை செலுத்தி வருகிறோம். 

அந்த வகையில் இணையத்தின் வழியில் பணம் செலுத்தும் போடு சில பணபரிமாற்றத்தின் போது முறைகேடுகள் நடப்பதாக அதிகளவில் புகார்கள் எழுந்ததையடுத்து., அதற்குரிய வாய்ப்பினை தடை செய்யும் வழியில் பல்வேறு திட்டங்களை ஆலோசனைகளாக பெற்று அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. 

அந்த முறையில்., ஸ்டேட் பாங்க் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு., அவர்களின் அலைபேசி எண்களை வங்கிக்கணக்கில் இணைக்கக்கூறி அறிவுறுத்தியது. அதன் படி வரும் நவம்பர் மாதம் 30 தேதிவரை வங்கி கணக்கில் எண்ணை இணைப்பதற்குரிய கால அவகாசத்தை அறிவித்தது. 

இந்த கால அவகாசம் தற்போது இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெறவிருக்கும் நிலையில்., தற்போது வங்கிக்கணக்கில் அலைபேசி எண்ணை இணைக்காத வாடிக்கையாளர்களின் இணையவழிசேவை தற்காலிகமாவாகவோ அல்லது நிரந்தரமாகவோ துண்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

மேலும் அவர்களால் ஏ.டி.எம் இயந்திரத்தில் மட்டுமே பணம் எடுக்க இயலும்., அவர்களுக்கு எந்த விதமான மின்னணு பரிவர்த்தனை சேவைகளும் வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளது. 

ஆன்லைன் மூலமாக பணப் பரிமாற்றம் என்பது சமீப காலமாக அதிகரித்துவருகிறது. மத்திய அரசும் டிஜிட்டல் முறையிலான பணப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து ஊக்குவித்துவருவதால், இனி வரும் காலங்களிலும் ஆன்லைன் பணப் பரிமாற்றம் என்பது அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. இதுபோன்ற பணப் பரிமாற்றங்களின்போது நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க, வங்கிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INTERNET BANKING WILL STOP SERVICES SBI ALERT


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal