ஊடுருவல் முயற்சி முறியடிப்பு...! - இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் வாலிபர் அதிரடி கைது...!
Infiltration attempt foiled Pakistani youth arrested trying trespass Indian border
ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இளைஞர் ஒருவரை எல்லைப்பாதுகாப்புப் படையினர் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டம் குல்பூர் பகுதியில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் நேற்று இரவு எல்லைப்பாதுகாப்புப் படையினர் வழக்கமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எல்லைப் பகுதியை கடந்து பாகிஸ்தானில் இருந்து மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றது பாதுகாப்புப் படையினரின் கவனத்திற்கு வந்தது.
இதையடுத்து, உடனடியாக உஷாரான எல்லைப்பாதுகாப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு அந்த இளைஞரை சுற்றிவளைத்து பிடித்தனர்.பின்னர், அவரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், பிடிபட்ட நபர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள போலஸ் கிராமத்தைச் சேர்ந்த முகமது சஜத் (26) என்பது தெரியவந்துள்ளது.
மேலும், அவர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், அவரது எல்லை மீறல் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பதை கண்டறிய எல்லைப்பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Infiltration attempt foiled Pakistani youth arrested trying trespass Indian border