இத்தாலியில் உயிரிழந்த இந்திய மாணவர் - மீட்டு தரக்கோரி கதறும் பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பூம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் ராவத். மேற்படிப்புக்காக இத்தாலிக்கு சென்ற இவர், அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ராவுத்தின் பெற்றோர் கடந்த 1-ம் தேதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக மகனை செல்போனில் தொடர்பு கொண்டனர். 

அப்போது, மகன் ராவத் செல்போன் எடுக்காததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவர் தங்கும் விடுதியின் உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது அவர்,
உங்கள் மகன் கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாகவும் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ராம் ராவுத்தின் குடும்பத்தினர் மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருமாறு ஜார்கண்ட் மாநிலத்தின் மூத்த அரசு அதிகாரிகளை அணுகி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேற்கு சிங்பூமின் துணை கமிஷனர் அனன்யா மிட்டல், ராம் ராவத் மரணம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும், ஜார்கண்ட் உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை முறையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இத்தாலியில் இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian student death in itali


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->