தேசியக்கொடியில் 'மேட் இன் சைனா' வாசகம் இடம்பெற்றதால் சர்ச்சை.! - Seithipunal
Seithipunal


கனடாவில் நடந்த காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் இந்திய தேசியக் கொடியில் "மேட் இன் சைனா" என இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் உள்ள ஹேலிஃபாக்ஸ் நகரில் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் சபாநாயகர்கள் கலந்து கொண்ட நிலையில் இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட அனைத்து இந்திய மாநில சபாநாயகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அப்போது நடந்த பேரணியில் இந்திய குழு கையில் தேசியக்கொடி ஏந்தி சென்றது. ஆனால் அந்த கொடிகளின் கீழ் அனைத்திலும் "மேட் இன் சைனா" என வாசகம் அச்சடிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிஸ்டரால் செய்யப்பட்ட இந்த கொடிகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், இந்திய தேசியக் கொடியை சீனாவிடமிருந்து வாங்குவதா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian National Flag Made in China controversy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->