இருளில் மூழ்கிய ஏர்போர்ட்... சினிமா பாணியில் மக்களை மீட்ட "இந்திய விமானப்படை"..! - Seithipunal
Seithipunal


சூடானில் ராணுவ படைகளுக்கும் துணை ராணுவ படைகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் தலைநகர் கார்ட்டூம் உட்பட முக்கிய நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை படிப்படியாக மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா ஆப்ரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை கப்பல்கள் ஐ.என்.எஸ். சுமேதா, ஐ.என்.எஸ். டெக், ஐ.என்.எஸ் தர்காஷ் மற்றும் விமானப்படையின் 2 சி-130ஜே ரக விமானங்கள் மூலம் 13 கட்டமாக 2400 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சூடானிலிருந்து கர்ப்பிணி பெண்கள், பெரியவர்கள் சிறு குழந்தைகள் உட்பட 121 பேரை சினிமா பாணியில் இந்திய விமான படையினர் மீட்கப்பட்டுள்ளனர். சூடானில் எரிபொருள் வசதி, சரியாக தரையிறங்கும் வசதி இல்லாத இருளில் மூழ்கிய விமான நிலையத்தில் நவீன தொழில்நுட்பம் கொண்ட மீட்பு விமானத்தை இந்திய வீரர்கள் தரையிறக்கி உள்ளனர்.

மேலும் போரில் பயன்படுத்தப்படும் நைட் விஷன் கண்ணாடிகளை பயன்படுத்தி கமாண்டோகள் போல் செயல்பட்டு 121 பேரை விமானத்தில் ஏற்றி, சினிமா பாணியில் பத்திரமாக மீட்டனர். சூடானில் தாக்குதலுக்கு நடுவே இந்திய மக்களை மீட்டு வருவதற்கு பல்வேறு தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian airforce rescued people from Sudan in cinema style


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->