ஜனாதிபதி மாளிகையில் உள்ள தோட்டத்திற்கு அம்ரித் உதயன் என்று பெயர் மாற்றம்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியில் ராஷ்டிரபதி பவன் எனப்படும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளது. 340 அறைகள், 74 வராண்டாக்கள் மற்றும் 18 படிக்கட்டுகள் கொண்ட இந்த ராஷ்டிரபதி பாவனைச் சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதில் பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள் மற்றும் நிறைய அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு வளர்க்கப்படும் செடிகளில் பூத்துக்குலுங்கும் பூக்கள் பார்ப்பதற்கு அழகாகவும், ரம்மியமாகவும் காட்சி அளிக்கும். 

இந்த ஆண்டு இந்தியா 75வது ஆண்டை கொண்டாட உள்ளதால், மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 'அசாதி கா அம்ரித் மகோத்சவ்' என்ற தலைப்பில் சுதந்திர தினம் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகையில் முகலாய தோட்டத்தை 'அம்ரித் உதயன்' என்று பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தகவலை குடியரசுத் தலைவருக்கான செய்தித்தொடர்பு துணை செயலாளர் நாவிகா குப்தா வெளியிட்டுள்ளார். இதன் மூலம் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள பூந்தோட்டம் இனி "அம்ரித் உதயன்" என்று அழைக்கப்பட உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india president house mughal garden name change in rashtrapati bhavan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->