புதிய தலைமுறை பாலிஸ்டிக் ஏவுகணை.! இந்தியா அசத்தல் ..! - Seithipunal
Seithipunal


இன்று ஒடிசா கடற்கரையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையான 'அக்னி பிரைம்'  வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 

இன்று காலை 9.45 மணியளவில் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையின் பாதை பல்வேறு புள்ளிகளில் நிலைநிறுத்தப்பட்ட ரேடார்கள் மற்றும் டெலிமெட்ரி கருவிகள் மூலம் மிக துல்லியமாக கண்காணிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஏவுகணை தாக்கும் எல்லை 1,000 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை இருக்கும் என்றும் டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india make new genaration polistic Missile agni prime


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->