கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவுக்கு அதிரடி தடையை விதித்தது இந்தியா.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக முக்கிய சில மருந்துப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்ளிட்ட 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட சில மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,  உலகின் மற்ற நாடுகளை போலவே கோடிக்கணக்கான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவும் கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது என்றார்.

மேலும், இந்தியாவில் தட்டுப்பாடுகள் உள்ள ஒருசில உபகரணங்கள், மருந்துப்பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india ban some product to export


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->