காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - 11-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கான தடை!
Increase in water flow in the Cauvery River Ban on tourists for the 11th day
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளா ,தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயரத் தொடங்கியது.
நேற்றைய தினம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக உயர்ந்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டடுள்ளது.
இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், தீவிர பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்கவும் பரிசல் சவாரி மேற்கொள்ளவும் விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.
English Summary
Increase in water flow in the Cauvery River Ban on tourists for the 11th day