நண்பனின் மனைவி மீது காம வெறி.. திட்டமிட்டு நண்பனை சிறைக்கு அனுப்பி, வீடுபுகுந்த கொடூரன்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி பகுதியில் இருக்கும் சிரோலி கிராமத்தில் வசித்து வந்த தம்பதியினரின் வாழ்க்கை நல்லபடியாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இந்த தம்பதியில் கணவரின் நண்பர்கள் வன்ம எண்ணத்தை மனதில் வைத்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். 

தனது நண்பனின் மனைவியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று எண்ணி நான்கு நண்பர்கள் திரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு நண்பனின் மனைவி மீது இருந்த மோகம் காம வெறியாக மாறியுள்ளது. 

இதனையடுத்து நண்பனை அவனது இல்லத்தில் இருந்து வெளியேற்ற நால்வரும் திட்டம் தீட்டி, போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்து நண்பனை சிறைக்கு அனுப்பி நல்லவன் போல நடித்து வந்துள்ளனர். 

பின்னர் நண்பனின் மனைவியை அடைய நினைத்து, தனியாக இருந்த பெண்ணின் இல்லத்திற்கு சென்று துப்பாக்கி முனையில் நான்கு பேர் சேர்த்து கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

தனது ஆசையை நிறைவேற்றிய காம கொடூரன்கள், நண்பனின் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இவர்களின் பிடியில் இருந்து எப்படியோ தப்பித்த பெண்மணி உதவிக்காக அலறவே, நள்ளிரவு நேரத்தில் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் திரண்டுள்ளனர். 

இவர்களிடம் மாட்டிக்கொண்டால் நமது கதி அவ்வுளவுதான் என்பதை அறிந்த கொடூர கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடவே, பெண் செய்வதறியாது விழிபிதுங்கி திகைத்து நின்றுள்ளார். மேலும், உன்னை எப்படியும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.  

மூன்று நாட்கள் பயத்தின் விழிம்பில் இருந்த பெண்மணி, என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணி இறுதியாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in uttarpredesh girl gang rapped by his husband friend police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->