சபரிமலைக்கா வருகிறாய்.. இந்தா மிளகாய்ப்பொடி தாக்குதல்.. பிந்துவுக்கு பகீர்.!! சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கானது 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. மேலும்., முந்தைய உத்தரவில் மாற்றம் செய்யப்படவில்லை என்பதால்., சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்கிற நிலையானது நீடித்து வருகிறது. 

tirupthi desai, sabarimala, seithipunal,

சபரிமலை விவகாரத்தில் சென்ற வருடத்தின் போது பல பிரச்சனைகள் ஏற்பட்டதால், சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும்., நீதிமன்ற அனுமதியோடு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்தது. இதனை மீறி சபரிமலை செல்ல முயன்ற பெண்களை கேரள காவல் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்த தருணத்தில்., சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக பெண்கள் உரிமை ஆர்வலரான திருப்தி தேசாய் கேரளாவிற்கு வருகை தந்துள்ளார். மேலும்., இவருடன் 8 பேர் கொண்ட குழு கேரளாவில் உள்ள கொச்சின் விமான நிலையத்திற்கு வந்துள்ள நிலையில்., கோட்டயம் வழியாக சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்., நீதிமன்றத்தை நாடுவதாக திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.

sabarimalai,seithipunal, sabarimalai iyyapan temple,

இது தொடர்பாக அவர் தெரிவித்த சமயத்தில்., இன்றைய தினம் அரசியலமைப்பு தினம். எங்களை யாரும் தடைக்கு முயற்சித்தால்., நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடருவோம். நாங்கள் எங்களின் திட்டத்தை முதலமைச்சர் மற்றும் டிஜிபிக்கு தெரிவித்துவிட்டோம். பாதுகாப்பு கொடுத்தாலும்., கொடுக்காவிட்டாலும் நாங்கள் சபரிமலை செல்வது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில்., இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த நபரொருவர் திருப்தி தேசாயுடன் வந்திருந்த பிந்துவின் மீது மிளகாய்ப்பொடியை தூவி தாக்குதல் நடத்தினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்., தாக்குதல் நடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும்., கடந்த வருடத்திலேயே பல தாக்குதல் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in sabarimala chilly powder attack done for bindhu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->