அமோக வெற்றி பெற்றும் கதறும் பாஜக.. விரட்டும் சிவசேனா...!! மகாராஷ்டிரத்தில் நிலவரம் என்ன?..!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் கடந்த 24 ஆம் தேதியன்று வெளியான தேர்தல் முடிவுகளின் படி எந்ததொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில்., ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சி கூட்டணியை அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலின் முடிவில் பாரதிய ஜனதா கட்சிக்கு 105 இடங்களும்., சிவசேனா கட்சிக்கு 56 இடங்களும் கிடைத்தது. 

இவர்களுக்கு அடுத்தபடியாக கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 44 இடங்களிலும்., தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 54 தொகுதியும் கிடைத்தது. மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்க 145 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலயில்., பாரதிய ஜனதா கூட்டணியானது மொத்தமாக 161 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இவர்கள் ஆட்சியை அமைக்கவில்லை., இழுபறி நீடித்து வருகிறது. 

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நடைபெற்ற கூட்டணி பிரச்சனைக்கு தீர்வு காண பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமித் ஷா மற்றும் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சென்று பேசினார். இதனையடுத்து பாராளுமன்ற தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில்., ஒப்பந்தமும் போடப்பட்டது. 

amith sha, அமித் ஷா,

இந்த ஒப்பந்தத்தின் படி சட்டமன்ற தேர்தலில் கூட்டணியாக சேர்த்து வெற்றி பெரும் பட்சத்தில்., ஆட்சியில் சமன்பங்கு என்ற முடிவானது எடுக்கப்பட்டது. இதன்படி இரண்டரை வருடங்கள் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முதல்வரும்., பிற வருடம் சிவசேனா கட்சியின் சார்பாக முதல்வரும் பதவிவகிக்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. 

தற்போது இந்த விஷயத்தில் இழுபறி நீடித்து வரும் நிலையில்., சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் இல்லத்தில் எம்.எல்.ஏக்களின் கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் உத்தவ் தாக்கரேயின் மகனான ஆதித்ய தாக்கரேயை முதலமைச்சராக்க முடிவு செய்துள்ளனர். 

இதற்கு ஏற்றாற்போலவே மும்பையில் உள்ள ஒர்லி தொகுதியில் போட்டியிட்ட ஆதித்ய தாக்கரே வெற்றியும் பெற்றார். இந்த நிலையில்., பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நம்பிக்கை அடிப்படையில் தரப்பட்ட பேச்சுக்கள் அனைத்தையும்., எழுத்து பூர்வமாக கையெழுத்திட்டு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

சிவசேனாவின் முடிவு பாரதிய ஜனதாவுக்கு சிக்கலி ஏற்படுத்தியுள்ள நிலையில்., இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவரான ராவ்சாகேப் தெரிவித்த சமயத்தில்., இது குறித்து எங்களின் கட்சிக்கு எதுவம் தேறியது என்று கூறிய நிலையில்., இது குறித்து இக்கட்சியின் முக்கிய புள்ளிகள் ஆலோசனை நடத்துவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரையில் ஐந்து நாட்கள் தொடர்ந்து தீபஒளித் திருநாள் கொண்டாடப்படும் நிலையில்., வரும் செவ்வாய்கிழமைக்கு பின்னர் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்., வரும் 30 ஆம் தேதியன்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டமும் நடைபெறுகிறது. 

இதுமட்டுமல்லாது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி விலகி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கூட்டணியாக இணைந்து., சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மூலமாகவும் ஆட்சியை கைப்பற்றவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னதான் நடக்கும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in maharastra govt form after deepawali festival


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->