தேர்வறைக்கு குதிரையில் பறந்து உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆன சிறுமி.! அவருக்கு குதிரையை வழங்கியது யார் தெரியுமா?.!! - Seithipunal
Seithipunal


இன்றளவில் உள்ள சூழ்நிலையில் பெண்கள் பல தடைகளை தாண்டி பள்ளிக்கூடத்திற்கு சென்று பயின்று வருகின்றனர். அந்த வகையில்., படிக்கும் மாணவ - மாணவியர்களுக்கு முக்கியமான ஒன்றாக தேர்வுகள் கருதப்படுகிறது. அவர்கள் தேர்வு எழுதி பின்னர் அதில் வரும் மதிப்பெண்கள் மூலமாக அவர்களின் எதிர்கால படிப்பை தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்நாளை நிலைநாட்டுகின்றனர். தேர்வுகளை எழுத செல்லும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு விரைவாக செல்ல வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 

கேரள மாநிலத்தில் உள்ள மாணவி தேர்வு அறைக்கு செல்ல நேரமானதால்., குதிரையில் அதிவேகத்தில் பறந்து தேர்வு அறைக்கு சென்றுள்ளார். அது குறித்த வீடியோ காட்சிகளானது வைரலாகி இருந்தது. கேரள மாநிலத்தில் உள்ள திரிசூரில் 10 வகுப்பு பயின்று வரும் மாணவி தேர்விற்கு நேரமாகிவிட்டதால்., குதிரை சவாரி செய்து தேர்வு அறைக்கு விரைந்துள்ளார். 


இந்த காட்சியை சாலை வழியாக சென்ற வாலிபர் ஒருவர்., காட்சிப்பதிவு செய்து தனது இணையத்தில் பதிவிடவே., அது வைரலாக துவங்கியது. இந்த மாணவி பள்ளி பள்ளி சீருடையுடன் குதிரை சவாரி செய்து தேர்வு அறைக்கு சரியான நேரத்தில் சென்று பரீட்சை எழுதியுள்ளார். இந்த விடீயோக்கள் இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து அந்த மாணவி யார் என்ற எண்ணமானது அனைவருக்கும் தோன்றியது., தற்போது அந்த மாணவி குறித்த தகவலானது வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள திரிசூரில் 10 வகுப்பு பயின்று வரும் மாணவியின் பெயர் கிருஷ்ணா. இவர் தினமும் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு குதிரை சவாரி செய்வது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்று தேர்வுக்கு நேரம் ஆகியதை தொடர்ந்து குதிரையின் மூலமாக தேர்வறைக்கு விரைந்தது தெரியவந்தது. இவரது இல்லத்தில் இது போன்று மற்றொரு குதிரையும் உள்ளது. 

இந்த இரண்டு குதிரையில் முதல் குதிரையை இவரின் தந்தை 11 வது பிறந்தநாளன்று தனது மகளுக்கு பரிசாக வழங்கியுள்ளார். அன்றுமுதல் குதிரையை ஆசையுடன் வளர்த்து வந்துள்ளார். இதனைப்போன்றே இவர் பத்தாம் வகுப்பு பயில துவங்கிய சில நாட்களில் மற்றொரு குதிரையையும் பரிசாக வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kerala girl horse ride due to late on exam her detail about gifted horse


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->