பயணிகள் பேருந்தில் 15 கிலோ ஆர்.டி.எக்ஸ்.! அலறிய பயணிகள்.. திகைத்துப்போன பாதுகாப்பு படையினர்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் பயங்கரவாத தாக்குதலானது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்தந்த நாட்டின் அரசாங்கம் தங்களின் மக்களை பாதுகாக்கும் பொருட்டு., தனது இராணுவ படைகளை தொடர்ந்து தீவிரமாக பயிற்சியளித்து., எதிரிகளின் தாக்குதலை முறியடித்து வருகிறது. 

என்னதான் நாட்டின் இராணுவம் மற்றும் காவல் படைகளை தயார்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும்., அவ்வப்போது தாக்குதல்கள் அரங்கேறி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக புல்வாமாவில் அரங்கேறிய கொடூர தாக்குதல்., இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்., சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த தாக்குதலால் மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர். 

explosive,

இந்த நிலையில்., ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா மாவட்டத்தின் பிளாவாரியில் இருந்து ஜம்முவிற்கு பேருந்து ஒன்று வந்துள்ளது. இந்த பேருந்தில் சோதனை செய்த பாதுகாப்பு படையினருக்கு பேரதிர்ச்சியாக., 15 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் செய்வதறியாது திகைக்கவே., பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில்., பெண் - ஆண் நபர்கள் இந்த பார்சலை தந்ததாகவும்., இதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் நாங்கள் வாங்கி வந்துவிட்டோம் என்று கூறியுள்ளனர். இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in kashmir indian army discovered 15 kg rdx bomb material in bus


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->