திகார் சிறைக்கு ஏற்பட்ட பெரும் சோகம்.! தவிக்கும் சிறை நிர்வாகம்.. கொந்தளிக்கும் பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 2012 ஆம் வருடத்தின் டிசம்பர் மாதத்தின் போது ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியை 6 பேர் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்த சோகம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை பதிவு செய்திருந்த நிலையில்., இந்த குற்றத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்த நிலையில்., ஒரேயொரு கொடூரன் சிறுவன் என்ற காரணத்தால் தப்பித்தான். மேலும்., ராம்சிங் என்பவன் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்டான். 

இதனைத்தொடர்ந்து மீதமுள்ள பவன் குப்தா., முகேஷ் சிங்., வினய் சர்மா மற்றும் அக்ஷய் தாகூர் ஆகிய நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்., உச்சநீதிமன்றமும் இத்தீர்ப்பை உறுதி செய்தது. 

suicide attempt, killed, murder,

இவர்கள் அனைவரையும் தூக்கி இடுவதற்கான பணிகள் திகார் சிறையில் நடைபெற்ற நிலையில்., 4 பேரும் தூக்கு தண்டனையை குறைக்க கூறி கருணை மனு தாக்கல் செய்த நிலையில்., இவர்களின் மனுவை டெல்லி கவர்னர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இவர்கள் நால்வரையும் தூக்கிலிட பரிந்துரை செய்தார். 

இவர்களின் கருணை மனு மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்ட நிலையில்., இது குறித்த விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் எப்போதும் தூக்கிலிடப்படலாம் என்ற நிலையில்., திகார் சிறையில் குற்றவாளிகளை தூக்கிலிட ஊழியர்கள் இல்லை என்பதால்., சிறை நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். மேலும்., விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in dikar prison death sign man wanted for kill delhi nirpaya culprits


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->