வெளிமாநிலங்களில் இருந்து நடந்தே தாயகம் திரும்பும் ஏழைகள்.! போலீசார் செய்த காரியம்.! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு ஊரடங்கு உத்தரவின் போது எந்த ஒரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. 

தமிழக அரசு ரேஷன் கார்டுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் இந்த அறிவிப்பு கூட வெளியாகவில்லை. இந்தநிலையில் குஜராத்தில் வேலை செய்துவரும் ராஜஸ்தானை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் தங்களுடைய ஊருக்கு நடைபயணமாக திரும்பி வருகின்றனர்.

போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதால் தங்களுடைய சொந்த ஊருக்கு அவர்கள் பெட்டி படுக்கையுடன் நடந்தே செல்வது மனதை உருக்கும் சம்பவமாக அமைந்துள்ளது. ஊர் திரும்பும் மக்களை காவல்துறையினர் தடுத்து மோடியின் அறிவிப்புக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டு வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி இருக்கின்றனர். 

அதற்கு அவர்கள், "நாங்கள் அன்றாடம்காய்ச்சிகள் வேலை செய்து வந்த இடத்திலேயே தங்கி வந்தோம். 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக நாங்கள் வேலை பார்த்து வந்த கடைகள், நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. 

எனவே, தற்போது எங்களுடைய முதலாளிகள் எங்களை வெளியேற்றி விட்டனர். எங்கே செல்வது என்று யோசித்த நிலையில், தற்பொழுது இந்த முடிவை எடுத்துள்ளோம்." என்று தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி வருகின்றனர். இவர்கள் சமூக நலக் கூடங்கள் அமைத்து தங்கவைக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in corona virus Gujarat workers return by walking


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->