பொதுமக்களே உஷார்.. நாடு முழுவதும் புதியதாக பரவும் வைரஸ் காய்ச்சல் - ஐம்சிஆர் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் தற்போது புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா நோய் தொற்றுக்குப் பிறகு பொதுமக்கள் தற்போது தான் சகஜமாக வெளியே வர தொடங்கியுள்ளனர். ஆனால் சமீப காலமாக பருவநிலை மாற்றங்களால் புதிய வகை வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன.

அந்த வகையில் நாடு முழுவதும் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த வகை காய்ச்சல் பரவி வருகிறது. அதன் காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் முதியவர்கள் என இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பாதித்து வருகிறது.

சாதாரண சளி இருமல் காய்ச்சலால் மாத்திரை மருந்து எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். ஆனால் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுவோர் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்த காய்ச்சலுக்கு காரணம் A H3n2 வைரஸ் தான் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், காய்ச்சல் விட்டாலும் 15 நாட்களுக்கு மேலாக தொண்டை வலியால் அவதிப்படுகின்றனர்.

இந்த வகை காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேட்ட போது, வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூளிர்காலம் முடியும் வரையில் குளிச்சியான காய் மற்றும் பழங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த வகை பாதிப்புகள் தீவிரமடையாமல் ஒரு வாரத்திற்குள் குணமாகிவிடும் என பொது சுகாதாரத்துறை மருத்துவ இயக்குனர் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் தனிநபர் சுகாதாரம், முகக்கவசம் அணிவது மற்றும் அதிக நீர் அருந்துவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMCR alert to new virus fever spread in India


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->