இயற்கையை கண்ணியத்துடன் கையாளுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் - திரவுபதி முர்மு.! - Seithipunal
Seithipunal


நேற்று டெல்லி விஞ்ஞான பவனில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் சார்பாக மனித உரிமை நாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, 

"மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு உணர்வும், இரக்கமும் மிகவும் அவசியமாகின்றது. மனிதருக்கும் கீழே நடத்தப்படுவோரின் இடத்தில் நம்மைப் வைத்துப் பார்க்கும்போதுதான் அவர்களுக்கு செய்ய வேண்டியவை குறித்து  அறிந்து கொள்ள முடியும். 

அதேபோல், உங்களை எப்படி நடத்த வேண்டுமோ? அதேபோன்று பிறரை நீங்கள் நடத்துங்கள் என்ற வாக்கில் மனித உரிமை அடங்கியுள்ளது. நாம் அனைவரும் விலங்குகளையும், மரங்களையும் அழித்ததன் விளைவுகளை தான் தற்போது சந்தித்துவருகிறோம். 

நாம் அனைவரும் இயற்கையை கண்ணியத்துடன் கையாளுவதற்கு மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டும். இது அறம் சார்ந்த கடமை மட்டுமல்ல, அதுவே உயிர் வாழ்வதற்கான அவசியமும் ஆகும்" என்று அவர் பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

human rights day celebration droubati murmu speach


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->