கேரள மசூதியில் இந்து தம்பதியினருக்கு திருமணம் - வீடியோவை பகிர்ந்த பிரபல இசையமைப்பாளர்.! - Seithipunal
Seithipunal


கேரள மசூதியில் இந்து தம்பதியினருக்கு திருமணம் - வீடியோவை பகிர்ந்த பிரபல இசையமைப்பாளர்.!

சமீபத்தில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள "தி கேரளா ஸ்டோரி" என்றத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ட்ரெய்லரில், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள், கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 

இந்த ட்ரெய்லருக்கு அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்து இந்த படத்தை திரையிட தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், உயர்நீதிமன்றம் இந்த படத்திற்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் இன்று வெளியானது. 

இந்த நிலையில், "காம்ரேட் ஃபரம் கேரளா" என்ற டுவிட்டர் முகவரியில் 'இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி' என் தலைப்புடன் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில், கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் ஒரு மசூதியில், இந்து தம்பதியருக்கு இந்து முறைப்படி திருமணம் நடப்பது போல் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து அதில், மனிதகுலத்தின் மீதான அன்பு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று தனது கருத்தையும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hindhu couples marriage in kerala masque


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->