இமாச்சல பிரதேச தேர்தல் : 11 மணிக்குள் 18 சதவீத வாக்குகள் பதிவு.!  - Seithipunal
Seithipunal


இன்று இமாசலபிரதேச மாநிலத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ள இந்த தேர்தலில், பா.ஜ.க. சார்பில் 20 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இந்த மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிக்கு முடிவடையும் இந்த வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில், மாநிலத்தின் முக்கிய வேட்பாளர்களாக முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர், மாநில காங்கிரஸ் தலைவர் அக்னிஹோத்ரி, முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் உள்ளிட்டோர் உள்ளனர். 

இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்கினை அளித்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரும் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 18 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று பதிவாகிற வாக்குகள், அடுத்த மாதம் 8-ந் தேதி நடைபெறும் குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்படும். அன்று பிற்பகலே இமாசலபிரதேசத்தை  ஆளபோவது பாஜகவா? காங்கிரஸா? என்று தெரியவரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

himachal pradesh 18 percentage voting within three hours


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->