சிக்கிட்டான்... சிக்கிட்டான்...! பல காலமாக தேடப்பட்டு வந்த ''மசூத் அசார்'' பயங்கரவாதி பதுங்கிய இடம் கண்டுபிடிப்பு...! - உளவுத்துறை
hideout longsought terrorist Masood Azhar has been discovered Intelligence
இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர், பாகிஸ்தான் நாட்டின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் 'மசூத் அசார்' என்பவர் . இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளில் முக்கிய புள்ளி.இந்த மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் அவர் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.

அண்மையில், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவிக்கும்போது, மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை. அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் இடத்தை இந்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது.
அவர் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் காணப்பட்டதாக உளவுத் துறை தகவல்கள் வெளியாகியுள்ளன.இப்பகுதி மசூத் அசார் முதலில் வசித்த பாகிஸ்தானின் பஞ்சபர் மாகாணம் பஹவல்பூரிலிருந்து 1000 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மசூத் அசார் தங்கியிருக்கும் இடத்தில் 2 மசூதிகளுடன், மதரசாக்கள், அரசினர் விடுதி, விருந்தினர் மாளிகைகளும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த இடம் ஜம்மு-காஷ்மீரில் இருந்து சுமார் 350 கி.மீ தூரத்திலுள்ளது. மசூத் அசார் சத்பரா சாலை பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானிலுள்ள 9 முகாம்களை இந்தியா குண்டு வீசி சிதைத்தது. இதில் பஹவல்பூரில் உள்ள மசூத் அசாரின் தலைமை முகாம் அடங்கும். இதில் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் வரை பலியானார்கள். மசூத் அசார் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்திய எல்லை அருகே மசூத் அசார் பதுங்கி இருப்பதால் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
English Summary
hideout longsought terrorist Masood Azhar has been discovered Intelligence