இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை.. மாநில முதலமைச்சர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் அரை லிட்டர் முதல் 20 லிட்டர் வரை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் பாட்டில்களில் தண்ணீரை அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டாலும் தொலைதூர பயணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு பொதுமக்களின் மத்தியில் அதிக அளவில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உபயோகம் அதிகரித்துள்ளதால் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க முடியாமல் அதிக அளவிலான சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது.

இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் அக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு லிட்டருக்கும் குறைவான ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் குடிநீர் பாடல்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா விஷ்வா ஷர்மா தெரிவித்துள்ளார். அரை லிட்டர் பாட்டில்கள் பொது மக்கள் மத்தியில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Half litre water bottle ban in Assam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->