தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை முடக்கியுள்ள ஹேக்கர்கள்..! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை சைபர் கிரிமினல்கள் ஹேக் செய்துள்ளனர். அத்துடன், உயர் நீதிமன்றத்தின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் திருடப்பட்டு விளையாட்டுத்தளத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து  தகவல் தொழில்நுட்ப பதிவாளர் வெங்கடேஸ்வர ராவ், உடனடியாக போலீஸ் டிஜிபிக்கு புகார் அளித்த்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;

'தெலுங்கானா உயர்நீதி மன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் tshc.gov.in ஆகும். கோர்ட்டில் இருந்து வழங்கப்படும் வழக்கு பட்டியல்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் பட்டியல்கள், நிர்வாக அறிவிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

இந் நிலையில், உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஆவணங்களில் யாரோ அடையாளம் தெரியாத நபர் உள்நுழைந்து, முடக்கியுள்ளார். ஆவணங்களை பார்க்க முனைந்தால், அது நேராக வேறு ஒரு விளையாட்டு இணையதளத்துக்கு இட்டுச் செல்கிறது.'' என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த புகாரை அடுத்து, எப்ஐஆர் பதிவு செய்து சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hackers have disabled the official website of the Telangana High Court


கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?




Seithipunal
--> -->