சாப்பாடு சுவையுடன் இல்லை.. வரிசையில் இருந்து வாங்க வேண்டியுள்ளது.. அரங்கேறிய வன்முறை...!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு தொடர்பான உத்தரவு அமளிக்கப்பட்டதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவசர அவசரமாக சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு செல்ல துவங்கியுள்ளனர். இப்படி செல்ல இயலாத நபர்கள் வேலை செய்த மாநிலத்திலேயே தங்க வைக்கப்பட்டனர்.

மேலும், வேலையை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவனம் சார்பாக உணவு, அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத் நகரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கை மீறி வீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இவர்களில் பெரும்பாலானோர் ஒடிசாவை சார்ந்தவர்களாக இருக்கும் நிலையில், இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று கூறி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். 

பின்னர் 80 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் சுவையுடன் இல்லை என்று கூறி பிரச்சனை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க போரட்டம் செய்துள்ளனர். மேலும், சாப்பாடை பெற வரிசையில் நிற்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat odisha workers violent about shelter food not tasty


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->