விருந்தாளியாக வந்து, நண்பன் மனைவியை அபகரித்து சென்ற சோகம்.. கண்ணீரில் கணவன்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மூணாறு பகுதியை சார்ந்தவர் லொதாரியோ (வயது 32). இவர் எர்ணாகுளத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், ஊரடங்கை அடுத்து அங்குள்ள மூவாட்டுப்புழா நகரில் சிக்கியுள்ளார். இதனால் தங்கும் இடம் மற்றும் சாப்பாடு இன்றி தவித்து வந்துள்ளார். இதனையடுத்து எர்ணாகுளத்தில் இருக்கும் பாலிய சிநேகிதரின் அலைபேசி எண்ணை பெற்றுள்ளார்.

அலைபேசியில் நண்பரை தொடர்பு கொண்டு, ஊரடங்கு காரணமாக கடுமையான கஷ்டத்தில் இருப்பதாகவும், தனக்கு உதவி செய்யுமாறும் கெஞ்சி கேட்டகவே, நண்பரும் தனது நண்பனின் நிலையை எண்ணி வேதனையடைந்து தனது இல்லத்திற்கு அழைத்து வந்துள்ளார். மேலும், நண்பனிற்கு தங்கும் இடம் மற்றும் சாப்பாடு போன்ற உதவிகளையும் செய்துள்ளார். 

சுமார் ஒரு மாத காலம் தனது நண்பரின் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில், மூணாறு பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பணிக்கு செல்ல கூறி நண்பரை அறிவுறுத்தியுள்ளார். ஆனால் பணிக்கு செல்லாமல் நான்கு நாட்கள் தங்க வந்த நண்பன், மாதக்கணக்கில் டேரா போட்டுள்ளார். இதனால் நண்பனிற்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், திடீரென மனைவி மற்றும் இரண்டு குழந்தையுடன் நண்பர் மாயமாகியுள்ளார். 

இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பெண் தனது காதலருடன் நான் செல்கிறேன் என்றும், குழந்தைகளும் என்னுடன் தான் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். காவல் துறையினர் மற்றும் கணவர் என கண்ணீருடன் அறிவுரை கூறியும் தனது முடிவில் இறுதியாக இருந்துள்ளார். 

இதுமட்டுமல்லாது பெண்ணின் பெயரில் கணவர் வாங்கி கொடுத்த கார் மற்றும் தனது நகைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு காதலருடன் கம்பி நீட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி கணவன் வருந்தி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl escape with her affair boy in kerala


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal