மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 32 சதவீதம் குறைவு.! - Seithipunal
Seithipunal


ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பல புது புது அறிவிப்புகள் வெளியிட்டு பின்னர் அது தொடர்பாகவும் நிதியமைச்சர் உரையாற்றினார். 

அப்போது, அந்த பட்ஜெட்டில் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 545 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
அதன் விவரம் பின்வருமாறு :-

"கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஊரக மேம்பாட்டு அமைச்சகத்திற்கு முதலில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர், திருத்தப்பட்ட மறுமதிப்பீட்டின் படி, ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் கோடியாக நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது. 

ஆனால், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட 13 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதி ஒதுக்கீட்டில், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டு, ரூ.60 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு, 100 நாள் வேலைத்திட்டத்திற்கு முதலில் ரூ.73 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு, பின்னர், திருத்தப்பட்ட மறுமதிப்பீட்டின் படி ரூ.89 ஆயிரத்து 400 கோடியாக உயர்த்தப்பட்டது. அதனுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, தற்போதைய நிதி ஒதுக்கீடு என்பது 32 சதவீதம் குறைவு ஆகும். அதாவது, மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fund allocation for hundrad day programe 32 percentage decrease in union budget


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->