ஹோலி பண்டிகை - நொய்டாவில் ரூ.14 கோடிக்கு மதுபான விற்பனை.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தின் கவுதம புத்தா நகர் மாவட்டத்தைச் சேர்ந்தது நொய்டா நகரம் ஆகும். இந்த நகரத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை அமோகமாக இருந்துள்ளது. அதாவது, ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு நாட்களில் ரூ.14 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது. 

இந்த மது விற்பனை, கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு ஏற்பட்ட அதிக விற்பனையாகும். இந்த நகரத்தில் கடந்த ஆண்டு ஹோலி பண்டிகைக்கு முன்பாக ரூ.11.5 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

அதே சமயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30 மற்றும் 31 உள்ளிட்ட தேதிகளில் ரூ.9 கோடி அளவிற்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களுடன், உள்நாட்டு மதுபான விற்பனையும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நொய்டா நகரத்தில் ஹோலி பண்டிகைக்கு முந்தைய நாட்களில் மதுபான விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றாலும், வழக்கம்போல் ஹோலி தினத்தன்று மதுபான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fourteen crores liquar sale in noida for holi festival


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->