கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்த மகன் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!  - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலம் பிரதாப்கார் நகரில் பத்தி என்ற பகுதியில் முகமது நயீம் என்ற தொழிலதிபர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதி, பியூஷ் பால், சுபம் சோனி மற்றும் பிரியன்ஷு ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் சம்பவம் தொடர்பாக  நடத்திய விசாரணையின்போது, நயீமை கொல்வதற்கு தங்களை கூலிப்படையாக அனுப்பியது அவருடைய 16 வயது மகன் என்று தெரிவித்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுவனான நயீமின் மகனை பிடித்து விசாரித்தபோது, 3 பேருக்கும் ரூ.6 லட்சம் என பேரம் பேசி முன்பணம் ரூ.1.5 லட்சம் கொடுத்து தனது தந்தையை கொலை செய்ய அனுப்பியது தெரிய வந்தது. 

இதற்கு காரணம், நயீம் அவருடைய மகனுக்கு வேண்டியபோது பணம் கொடுக்காமல், மறுத்து வந்துள்ளார். இந்த ஆத்திரத்தில் மகன் இருந்து வந்த சிறுவன் தனக்கு தேவையானபோது, கடையில் இருந்து பணம் திருடுவது அல்லது வீட்டில் இருந்து நகைகளை திருடி செல்வது என்று அடிக்கடி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் நயீமை கொலை செய்ய முயன்ற 3 பேரையும் சிறையில் அடைத்தனர். மேலும், சிறுவன் சீர்திருத்த இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பணம் கொடுக்க மறுத்த தந்தையை கூலிப்படையை ஏவி மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for murder in uttar pradesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->